பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது அரசு – விக்டர் ஐவன் !
Tuesday, May 8th, 2018
இலங்கை தற்பொழுது பெரும் நெருக்கடிக்கு உட்பட்டுள்ளது. அரசும், நாட்டிலுள்ள சகல அரச நிறுவன முறைமையும் வீழ்ச்சிக்கு முகம்கொடுத்துள்ளன என்று சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.
தம்புள்ளயில் நேற்று நடைபெற்ற செயலமர்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தெரிவித்ததாவது:
நாட்டின் அனைத்துப் பகுதிகளும் குப்பையாக மாறியுள்ளன. அரசியல்வாதிகளுக்கு மக்களிடத்திலுள்ள வரவேற்பும் காற்றாக மாறியுள்ளது.
எந்தவித சட்ட முறைமையும் செயற்படுத்த முடியாத அளவுக்கு நாட்டு நிலைமை மோசமடைந்துள்ளது. குறைந்த பட்சம் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றைக் கூட சரியான முறையில் வெளியிட்டுக் கொள்ள முடியாத நிலைக்கு நாட்டு நிலைமை தள்ளப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் தலைவர்களிடம் ஞானம் இல்லாத ஒரு நிலைமை காணப்படுகின்றது என்றார்.
Related posts:
வாக்காளர் இடாப்பு பதிவுகள் இன்றுடன் நிறைவு!
பதிவு செய்யப்படாது இயங்கும் இரசாயன மருந்துக் கடைகளுக்கு விரைவில் சட்ட நடவடிக்கை யாழ்ப்பாண மாவட்டச் ச...
அடுத்த சில நாட்களில் இலங்கைக்கான தடுப்பூசி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடப்படும் - இலங்கைக்கான ச...
|
|
|


