பெரும் அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில் புதிய அமைச்சரவை நியமனம்!

Thursday, December 20th, 2018

பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
ஊடகங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறைக்குள் அழைக்கப்பட்டு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1. தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோ நியமனம்
2. தேசிய கொள்கை, அபிவிருத்தி நடவடிக்கை மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு, வட மாகாண அபிவிருத்தி, தொழில் பயிற்சி, இளைஞர் விவகாரம், திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில் அபிவிருத்தி அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
3. சுற்றுலா அபிவிருத்தி, வனவிலங்கு மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சராக ஜோன் அமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
4. பௌத்த சாசன மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சராக காமினி ஜயவிக்ரம பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
5. நீதி மற்றும் ஊடகத்துறை அமைச்சராக மங்கள சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.
6. சுகாதார அமைச்சராக ராஜித சேனாரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
7. வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன நியமிக்கப்பட்டுள்ளார்.
8. நகர திட்டமிடல், நீர்பாசன மற்றும் உயர் கல்வி அமைச்சராக ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டுள்ளார்.
9. மின்சக்தி, எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சராக ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
10. மாநகர சபை மற்றும் மேல் மாகாண சபை அபிவிருத்தி அமைச்சராக பட்டாலி சம்பிக்க ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
11. வீடமைப்பு மற்றும் கலாசார அமைச்சராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டுள்ளார்.
12. கல்வி அமைச்சராக அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.
13. நீதிமன்றம் மற்றும் சிறைச்சலை சீர்த்திருக்க அமைச்சராக தலதா அத்துகோரல நியமிக்கப்பட்டுள்ளார்.
14. துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சராக சாகல ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
15. மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சராக ரிஷாட் பதியூதின் நியமிக்கப்பட்டுள்ளார்.
16. தபால் சேவை மற்றும் முஸ்லிம் மத விவகார அமைச்சராக அப்துல் ஹலீம் மொஹமட் ஹாஷிம் நியமிக்கப்பட்டுள்ளார்.
17. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சராக அர்ஜுன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
18. காணி மற்றும் நாடாளுமன்ற சீர்த்திருத்த அமைச்சராக கயந்த கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
19. மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சராக பழனி திகாம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
20. தொழில் உறவு அமைச்சராக தயா கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.
21. பெருந்தோட்டத்துறை அமைச்சராக நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
22. பொது நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
23. மகளிர், சிறுவர் நலன்புரி மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சராக சந்திராணி பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
24. தேசிய ஒருங்கிணைப்பு, மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சராக மனோ கணோசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
25. விவசாயம், கிராமப்புற பொருளாதார அலுவல்கள், கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சராக பி.ஹரிசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
26. அபிவிருத்தி உத்திகள் மற்றும் சர்வதேச வர்த்தக அறிவியல், தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சராக மலிக் சமரவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts: