சவுதியுடன் நட்டயீட்டை விரைவாக பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம்.. !
Saturday, June 29th, 2019
சவுதி அரேபியாவில் இலங்கையர்கள் எவரும் மரணித்தால், அவர்களுக்கான நட்டயீட்டை விரைவாக பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஜித்தாவில் உள்ள இலங்கை துணைத்தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கை துணைத் தூதரகம் மற்றும் சவுதி அரேபிய சட்ட நிறுவனம் என்பன இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.
இதன்படி மூன்றாம் தரப்பொன்றின் கவனயீனமான காரணங்களுக்காக சவுதி அரேபியாவில் மரணிக்கின்ற இலங்கையர்களுக்கு நட்டயீடு வழங்குவதற்கான வழக்குகளை துரிதமாக ஆரம்பிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்.பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்!
ஏப்ரல் 21 கொடூரத் தாக்குதல் - மார்ச் மாதம் 8 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உயர் நீதிமன்றம்...
சுருக்கு வலை தொழிலில் ஈடுபடுவோர் கடற்படையினரால் கைது செய்யப்படும் போது எந்த சந்தர்ப்பத்திலும் ஈ.பி....
|
|
|


