பெப்ரவரி 29 ஆம் திகதி லீப் நாளை கூகுள் தேடுபொறி தனது முகப்புப் பக்கத்தில் பதிவிட்டு சிறப்பிப்பு!

பெப்ரவரி 29 ஆம் திகதி என்றாலே ஒரு சின்ன சந்தோஷம் அனைவருக்குள்ளும் எட்டிப்பார்க்கும். ஏன் என்றால், இந்த பெப்ரவரி 29 ஆம் திகதியை நாம் மீண்டும் சந்திக்க வேண்டும் என்றால் 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
அதனடிப்படையில் இன்று பெப்ரவரி 29 ஆம் திகதி லீப் நாள். இதனை சிறப்பிக்கும் வகையில் கூகுள் தேடுபொறி தனது முகப்புப் பக்கத்தில் குதிக்கும் டூடுலைப் போட்டு சிறப்பித்துள்ளது.
28, 29, 1 என்ற எண்கள் கூகுள் என்ற வார்த்தையில் இணைக்கப்பட்டு, அவை குதித்துக் கொண்டிருக்கும் வகையில் டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புவி சூரியனை ஒரு சுற்று சுற்றிவர முன்னூற்று அறுபத்து ஐந்தேகால் நாள்கள் ஆகின்றன.
இந்த கால் நாளை கணக்கிடாமல், ஆண்டுக்கு 365 நாள்கள் என்றே அறிவியல் அறிஞர்கள் கணக்கிடுகின்றனர். எனவே, பெப்ரவரி மாதத்தில் 28 நாள்கள் மட்டுமே வருகிறது.
மீதமுள்ள கால் நாள்களைச் சேர்ந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாளாக கணக்கிடும்போது, பெப்ரவரி மாதத்தில் 29 ஆவது நாள் சேர்கின்றது.
அந்தவகையில் பெப்ரவரி மாதத்தில் 29 நாள்கள் வரும் ஆண்டை லீப் ஆண்டு என்கின்றனர். அதன்படி 2024 லீப் அண்டு ஆகும். அடுத்து 2028 என்று அடுத்தடுத்த 4 ஆண்டுகள் கழித்துதான் லீப் ஆண்டுகள் வரும்.
எனவே, லீப் ஆண்டில் பெப்ரவரி 29 ஆம் திகதி பிறந்தவர்கள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறந்த நாள் கொண்டாட முடியும்.
எனவே லீப் நாளில் பிறந்தவர்கள் மிக இளமையானவர்களாக தோற்றம் இருக்கக்கூடியவர்கள் என்றெல்லாம் கூறுவார்கள்.
ஆங்கிலத்தில் இந்த லீப் நாளில் பிறந்தவர்களை லீப்லிங், லீப்பர், லீப் இயர் பேபி என்றும் அழைப்பார்கள். இவர்கள் லீப் ஆண்டு இல்லாத ஆண்டுகளில் பிப்ரவரி 28 அல்லது மார்ச் 1 ஆம் திகதிகளில் தங்களது பிறந்த நாளைக் கொண்டாடலாம்.
இதனிடையே பூமியின் மொத்த மக்கள் தொகையைக் கருத்தில் கொள்ளும்போது, லீப் நாளில் பிறப்பதற்கான முரண்பாடுகள் குறிப்பிடத்தக்கவை. எனினும் பெப்ரவரி 29 அன்று குழந்தை பிறப்பதற்கு 1461 இல் 1 பங்கு வாய்ப்பே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இதேவேளை முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் லீப் ஆண்டில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் இன்று பிறந்த நாளை கொண்டாடும் அனைவருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
000
Related posts:
|
|