பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் தேவைப்பாடுகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு!

பெண்களை தலைமைத்துவமாக கொண்ட வறிய நிலையில் காணப்படும் குடும்பங்களின் தேவைப்பாடுகளை கருத்தில் கொண்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாநகரசபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான றெமீடியஸ் அவர்களது நிதி பங்களிப்புடன் பாஷையூரைச் சேர்ந்த பெண்களை குடும்பத் தலைமையாகக் கொண்ட ஒருதொகுதி குடும்பங்களின் பிள்ளைகளது கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்காகவும் வாழ்வாதாரத்துக்கான தொழில் நடவடிக்கைகளுக்காகவும் இந்த உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த உதவி வழங்கும் நிகழ்வில் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளர் வசந்தன் மற்றும் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
Related posts:
|
|