பெண்களுடன் அநாகரிகமான நடந்து கொண்டவர்களை எச்சரித்தவர் மீது வாள் வெட்டு – யாழில் சம்பவம்!

Tuesday, September 24th, 2024

யாழ் . மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் பெண்களுடன் சேட்டை புரிந்த இளைஞர்களை எச்சரித்த தனியார் பேருந்து சாரதி மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பேருந்து சாரதியான வினாசித்தம்பி ஜெகதீஸ்வரன் என்பவர் மீதே நேற்றைய தினம் திங்கட்கிழமை வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

கொழும்புத்துறை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் பயணிகளை ஏற்றி வந்த வேளை மணியந்தோட்டம் பகுதியில் பேருந்தை மறித்து சாரதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த சாரதி யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் யாழ் . மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் 04 பேர் கொண்ட கும்பல் ஒன்று, பேருந்து நிலையத்திற்கு வரும் பெண்களுடன் அநாகரிகமாக நடந்து கொண்டு , தொந்தரவு செய்துள்ளனர்.

இதனை அவதனித்த சாரதி, குறித்த இளைஞர்களை கடுமையாக எச்சரித்து , அங்கிருந்து அப்புறப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் , அன்றைய தினம் பெண்களுடன் அநாகரிகமாக நடந்து கொண்ட இளைஞர்கள் கும்பலை சேர்ந்தவர்கள் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்து, பயணிகள் சேவையில் ஈடுபட்டிருந்த பேருந்தை மறித்து வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

000

Related posts: