பூரண தடுப்பூசி ஏற்றியிருக்க வேண்டும் என்ற நடைமுறை ஏப்ரல் 30 க்கு பின்னர் அமுல் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

Saturday, February 19th, 2022

பொது இடங்களுக்கு செல்பவர்கள், பூரண தடுப்பூசி ஏற்றத்திற்கு உள்ளாகி இருக்க வேண்டும் என்ற நடைமுறை ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியின் பின்னர் அமுலுக்கு வரவுள்ளது.

இதற்கமைவான செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொதுமக்கள் பூரண தடுப்பூசி ஏற்றத்திற்கு உள்ளாகியிருக்கின்றார்களா? இல்லையா? என்பதை அறிந்துகொள்ள செயலி ஒன்றையோ அல்லது அட்டை ஒன்றையோ அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை நாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசி தொகை, எதிர்வரும் ஜூலை மாதத்துடன் காலாவதியாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுவரையில் 6.2 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: