பூகோள காலநிலை, பொருளாதாரம் தொடர்பில் புது டெல்லியில் மாநாடு – இந்தியா செல்கிறார் அமைச்சர் அலி சப்ரி!

வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நாளை 02 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளார்.
பூகோள காலநிலை, பொருளாதாரம் தொடர்பில் இந்தியாவின் புது டெல்லியில் நடைபெறும் மாநாடொன்றில் கலந்துகொள்வதற்காக அவர் அங்கு செல்லவுள்ளார்.
இந்த மாநாட்டை தவிர, மார்ச் 03 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள விசேட கலந்துரையாடல் ஒன்றிலும் அமைச்சர் கலந்துகொள்ளவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 04 ஆம் திகதி வரை அலி சப்ரி இந்தியாவில் தங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நாட்டில் பயங்கரவாதம் முடியவில்லை - பிரதமர் ரணில்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழை - அனைத்து குளங்களும் அதிகளவில் வான் பாயும் நி...
அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரல் மார்ச் 15 நிறைவு - சுமார் 250,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளத...
|
|