அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரல் மார்ச் 15 நிறைவு – சுமார் 250,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Thursday, February 29th, 2024

அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழ் சுமார் 250,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதேச செயலகங்களில் நேரடியாக வழங்கப்பட்ட விண்ணப்பங்களை Online ஊடாக தரவு கட்டமைப்பில் உள்ளடக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய, இரண்டாம் கட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட சந்தர்ப்பம் எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.

அஸ்வெசும திட்டத்திற்காக புதிதாக தகுதி பெறும் 24 இலட்சம் குடும்பங்களுக்கும் ஜூன் மாதம் முதல் கொடுப்பனவுகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான அஸ்வெசும கொடுப்பனவிற்காக 205 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பொய்யான தகவல்களின் மூலம் அஸ்வெசும நன்மைகளைப் பெற்ற சுமார் 7000 பேர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான நபர்களிடமிருந்து பணத்தை மீளப்பெறவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பித்த பயனாளிகளின் தரவு சரிபார்ப்பு மற்றும் சான்றுபடுத்தல் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அஸ்வெசும பயனாளிகளின் குடும்ப அலகுகளின் எண்ணிக்கையை ஜூன் மாதம் முதல் 24 இலட்சமாக அதிகரிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரல் 2024 மார்ச் 15 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்காதவர்கள் எவரும் அஸ்வெசும பலனைப் பெறத் தகுதி பெற மாட்டார்கள் எனவும் இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


இயற்கை பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் மட்டக்களப்பில் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுப்பு!
யாழ்மாவட்டத்தில்அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் ஏற்பாடு - மாவட்டச் செயலகம் அறிவிப்ப...
உர வகைகளுக்கான கடனான 23,000 மில்லியனில் 93 வீதம் மீளச் செலுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் மகிந்த அமரவீர ...