புலிகளுடனான யுத்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுமாறு இலங்கையிடம் ஆப்கானிஸ்தான் கோரிக்கை!
Monday, August 9th, 2021
ஆப்கானிஸ்தான் முக்கிய நகரங்களை தலிபான் போராளிகள் கைப்பற்றிவரும் நிலையில் இலங்கையின் ஈடுபாட்டினை அந்நாட்டு அரசாங்கம் கோரியுள்ளது.
அத்துடன் ஆப்கானிஸ்தான் மோதலில் வேறு எந்த நாட்டை விடவும் சிறப்பான பங்கை இலங்கை வகிக்க முடியும் என இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் அஷ்ரப் ஹைதாரி குறிப்பிட்டுள்ளார்.
ஒன்லைனில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதர் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பான அனுபவங்களை ஆப்கானிஸ்தானுக்கு பகிர்ந்துகொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை தற்போது ஆப்கானிஸ்தானுடன் வளர்ச்சி மற்றும் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள இந்தியாவும் பங்களிப்பினை வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக ஐ.நா. பாதுகாப்பு சபையின் தற்போதைய தலைவராக இருக்கும் இந்தியா, இந்த விவகாரம் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் சீன எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளில் தலிபான் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் பயங்கரவாதிகள் சீனா மற்றும் மத்திய ஆசியா மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு காணப்படுவதாகவும் ஆப்கானிஸ்தான் தூதுவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


