புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களுக்கு வாக்குரிமை – வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர்!

Friday, March 17th, 2017

புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களின் வாக்குரிமையை உறுதி செய்யும் வழிவகைகள் குறித்து அரசாங்கம் ஆராய்துவவதாக வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துகொரல தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை பெற்றுக்கொடுப்பது பற்றி ஆராய்ந்து வருவதாக வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அனுராதபுர கல்நாவ பிரதேசத்தில் இடம்பெற்ற புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்களுக்கான நடமாடும் சேவையில் அவர் உரையாற்றினார். இதுபற்றி தேர்தல்கள் ஆணைக்குழு குடிவரவு குடியகல்வு திணைக்களம்  வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. விரைவில் சட்டமா அதிபருடனும் பேசவிருப்பதாக அமைச்சர் மேலும்  தெரிவித்துள்ளார்.

Related posts: