இலங்கையில் மீன் பதனிடும் தொழிற்சாலையை அமைக்க சீஷெல்ஸ் உதவி!

Wednesday, March 1st, 2017

இலங்கை வருகைதந்துள்ள சீஷெல்ஸ் ஜனாதிபதி டெனி பேவுரே (Danny Faure) கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவை சந்தித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கையின் முன்னணி படகு உற்பத்தியாளரான சீனோர் நிறுவனத்திடமிருந்து படகுகளை கொள்வனவு செய்வது பற்றி கவனம் செலுத்தப்பட்டது.

மீன் பதனிடும் தொழிற்சாலையை இலங்கையில் அமைக்க சீஷெல்ஸ் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப் பெரிய மீன் பதனிடும் தொழிற்சாலை சீஷெல்ஸில் அமைந்துள்ளது. இதனை பார்வையிட வருமாறு சீஷெல்ஸ் ஜனாதிபதி அமைச்சருக்கு அழைப்பு விடுத்தார்.இந்த சந்திப்பில் சீனோர் நிறுவனம் தற்சமயம் சீஷெல்ஸ் நாட்டுக்கான படகுகளை ஏற்றுமதி செய்வதாக அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் படகுகளுக்கு சர்வதேச மட்டத்தில் உயர்ந்த கிராக்கி நிலவுகிறது. நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய பாரிய அளவிலான ஐந்து மீன்பிடிப் படகுகளை தமது நாட்டுக்காக தயாரித்து வழங்குமாறு சீஷெல்ஸ் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார். இதன் பெறுமதி 13 கோடி 60 லட்சம் ரூபாவாகும்.

இதன் பின்னர் இலங்கையிடமிருந்து தொடர்ச்சியாக படகுகளை கொள்வனவு செய்யுமாறு சீஷெல்ஸ் ஜனாதிபதி, அந்நாட்டு விவசாய அமைச்சருக்கு பணிப்புரை வழங்கினார்.

இந்தப் படகுகளை ஆறு மாதங்களுக்குள் வழங்க அமைச்சர் மஹிந்த அமரவீர இணக்கம் தெரிவித்துள்ளார்.இலங்கையின் 16 மீன்பிடித் துறைமுகங்களுக்கு அமைவாக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது பற்றியும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

b0eadd144c650cc4730f6f751a7bd1d2_XL

Related posts: