புலம்பெயர்ந்தவர்கள் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வமாகவுள்ளனர் -அமைச்சர் மங்கள !

Saturday, July 29th, 2017

நாட்டில் சிறப்பான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கு வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்வதற்;கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்திக்கான திட்டத்தில் இளைஞர்களை இணைத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விடயத்தில் இலங்கையிலிருந்து சென்ற புலம்பெயர்ந்தோர்( டயஸ்போறாஸ் ) முதலீடுகளை மேற்கொள்வதில் ஆர்வமாக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 1977 மறுமலர்ச்சியின் 40 ஆண்டு நிறைவு கொண்டாடப்படும் இத்தருணத்தில் நாட்டின் எதிர்கால பொருளாதாரம் குறித்த இத்திட்டத்தை விளக்கமளிப்பதற்கு இங்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

77 பொருளாதார மறுமலர்ச்சியின் முன்னோடிகளின் ஒருவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்குகொள்ளும் இந்த நிகழ்வில் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தததையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.1977ம்ஆண்டு பொருளாதார மறுமலர்ச்சி இலங்கையில் ஆரம்பமானது. இந்த காலப்பகுதியில் இந்தியா சீனா போன்ற நாடுகள் இலங்கையிலும் பார்க்க பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் காணப்பட்டன.

ஆனால் இன்று இலங்கையிலும் பார்க்க இந்த நாடுகள் பொருளாதார ரீதியில் வல்லரசுகளாக மேம்பட்டுவருகின்றன.1977ம் ஆண்டு ஏற்பட்ட மறுமலர்ச்சிக்கு பின்னர் இந்தியா போன்ற நாடுகளிலும் பார்க்க வர்ணத்தொலைக்காட்சி கையடக்கத் தொலைபேசிகள் இலங்கையிலேயே முதன் முதலில் அறிமுகமாகின. இந்த பொருளாதார மறுமலர்ச்சி திட்டங்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ காலத்தில் கைவிடப்பட்டதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டினார்.

2015ம் ஆண்டில் நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்றபோது வீழ்ச்சிகண்ட சீர்குலைந்த நாட்டின் கடன்சுமையையே நாம் பொறுப்பேற்கவேண்டியிருந்தது.பிராந்திய ரீதியில் மிகக்குறைந்த வருமானத்தை கொண்ட நாடாக இலங்கை அப்போது காணப்பட்டது.2005ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு காலவரையில் முறையற்ற திட்டங்களுக்கு பெற்ற வெளிநாட்டு கடன்சுமையுடன் நாடு மிகவும் மோசமானநிலையில் காணப்பட்டது.

மீதொட்டமுல்லயில் குவிந்துகிடந்த குப்பைமேடுபோன்று கடன்சுமையுடன் நாட்டை சமகால அரசாங்கம் சுமக்கவேண்டியேற்பட்டது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் வழிகாட்டலில் 2015;ம் ஆண்டிற்கு பின்னர் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார திட்டங்களினால் காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட சவால்கள் வெள்ளம் மற்றும் இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் ஆகியவற்றை எதிர்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடிந்தது. இன்று நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமான நிலையில் உள்ளது.

சர்வதேச ரீதியிலான வர்த்தக சவால்களை முகங்கொடுக்ககூடிய வகையில் பொருளாதார திட்டங்கள் சமகால அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மகாவலித்திட்டமே நாட்டின் இறுதியாக கொள்ளப்பட்ட பாரிய பொருளாதார அபிவிருத்தி திட்டமாகும்.இதற்கு பின்னர் நாளை ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி திட்டம் கைச்சாத்திடப்படுகின்றது.

இது இலங்கை பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு மற்றுமொரு மைல்க்கல்லாக அமையுமென்றும் அமைச்சர் கூறினார். வெளிநாடுகளுக்கு சென்று குறைந்த வருமானத்தை பெற்று எமது நாட்டவர்கள் அங்கு கஷ்டப்படுகின்றனர். நாட்டிலேயே கூடுதலான வருமானத்தை பெறக்கூடிய வகையில் பொருளாதாரத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Related posts: