புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளி பட்டியல் உரிய பாடசாலைகளுக்கு அனுப்பிவைப்பு!
Thursday, December 15th, 2016
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளி பட்டியல்கள் உரிய பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரப் பணிப்பாளர் டபிள்யு.கே.எம்.விஜேதுங்க தெரிவித்துள்ளார்.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பிரபல பாடசாலைகளில் இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப் புள்ளிப் பட்டியல்கள் உரிய பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அடுத்துவரும் இரண்டு தினங்களில் இந்த வெட்டுப் புள்ளிப் பட்டியல்கள் உரிய பாடசாலை அதிபர்களுக்கு கிடைக்கப்பெறும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்த விபரங்கள் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணைத்தளத்திலும் சேர்க்கப்பட்டுள்ளதாக திரு.விஜேதுங்க மேலும் குறிப்பிட்டார்.

Related posts:
வேலைநிறுத்த மருத்துவர்களுக்கு எரிபொருள் இல்லை!
ஏப்ரல் 21 தாக்குதல்: பொருளாதார இழப்புகள் குறித்து கணிப்பீடு!
யாழ் - கொழும்பு விமான சேவைகள் விரைவில் - யாழ். இந்திய துணைத் தூதர் தெரிவிப்பு!
|
|
|


