புற்று நோயாளர்கள் மற்றும் சிறுவர்களுக்கு புதிய வைத்தியசாலைகள் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

புற்று நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக விசேட வைத்தியசாலைகளையும், நவீன வசதிகளுடனான சிறுவர்களுக்குரிய வைத்தியசாலை ஒன்றினையும் நிர்மாணிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் குறித்த ஆலோசனையை ஜனாதிபதியின் செயலாளர் ஈ எம் எஸ் பி ஏக்கநாயக்கவினால் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை, பதுளை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் புற்றுநோய்க்கான வைத்தியசாலைகளையும் பொருத்தமான இடத்தில் சிறுவர்களுக்கான வைத்தியசாலை ஒன்றையும் நிர்மாணிப்பதற்குரிய ஆலோசனையே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
1 இலட்சம் மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி
அமரர் தியாகராஜா பரமேஸ்வரியின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!
சட்டத்தை அமுல்படுத்தும் பிரிவினரால் கைப்பற்றப்படும் ஹெரோயின் மீண்டும் சந்தைக்கு வரும் நிலை காணப்படுக...
|
|