புற்றுநோய் வைத்தியசாலை அமைப்பதற்கு நிதி திரட்டும் நடைபயணம் இன்று ஆரம்பம்!

Thursday, October 6th, 2016

புற்றுநோய்க்கு எதிராக போராடுபவர்களை கௌரவிப்பதையும் அவர்களுக்கு உதவுவதையும் நோக்காகக் கொண்டு வடக்கில் பருத்தித்துறை முதல் தெற்கில் தெய்வேந்திரமுனை வரையான 670 கிலோ மீற்றர் தூரத்தை 28 நாட்களில் நடப்பதே வழித்தடம் ஆகும்.

வழித்தடத்தை கூட்டாக நிறுவியவர்களான நாதன் சிவகணநாதனும் சரிந்த உணம்புவேயும் மீண்டும் இந்த வருடமும் முழுத்தூரத்தையும் இன்று 6ஆம் திகதி வியாழக்கிழமை முதல் நவம்பர் 2ஆம் திகதிவரை நடக்கவுள்ளனர். காலியில் உள்ள கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை விரிவுபடுத்துவதற்காக 5மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைச் சேகரிப்பதே வழித்தடம் 2016 இன் குறிக்கோள்.

2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட வழித்தடம் இலங்கையிலுள்ள அதிகளவிலான மக்களின் நிதியுதவியுடனான ஒரு அறக்கொடை முயற்சியாகும். தனது முதல் வருடத்தில் தெல்லிப்பளை வழித்தடம் புற்றுநோய் வைத்தியசாலையை நிறுவுவதற்காக 2.6மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைச் சேகரித்திருந்தது.

2016 ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட முதல் அவ்வைத்தியசாலை இலங்கையின் வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு பகுதியில் வாழும் 4500 இற்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கியிருக்கிறது. நாட்டில் வாழும் பல்வேறு சமூகத்தினரும் ஒன்றுபடும்போது உருவாகும் சத்தமிக்க தாக்கத்தினை வழித்தடம்-2011 இன் வெற்றி கோடிட்டுக் காட்டியது. இது இலங்கையில் புற்றுநோய் சிகிச்சையை எவ்வாறு மேலும் மேம்படுத்த முடியும் என்பதைக் கண்டறிவதற்கு வழித்தடம் 2011இன் நிறுவுனர்களை ஊக்கப்படுத்தியது.

எனவே 1982 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இலங்கையின் 3ஆவது பெரிய வைத்தியசாலையாகிய காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையை விரிவுபடுத்துவதற்கான நிதி சேகரிப்பு பணியில் இறங்கினார்கள். 2015ஆம் ஆண்டில் புற்றுநோயுடன் தொடர்புபட்ட இறப்புகள் அதிகூடிய எண்ணிக்கையில் இந்த வைத்தியசாலையில் பதிவாகியுள்ளன. அத்துடன் சுற்றிவர இருக்கும் பிரதேசங்களிலிருந்து அதிகளவிலான நோயாளர்கள் இங்கு வருவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் புற்றுநோய்க்கு எதிராக எமது நாடு தொடுக்கும் போரில் ஒன்று சேர்ந்து நாம் நடக்கும் போது நீங்களும் எம்முடன் சேர்ந்து கொள்ளுங்கள். பங்குபற்றுபவர்கள் எமது முழு நடைபயணத்தின் போதான 28 நாட்களும் அல்லது வழியில் எங்காவது ஒரு இடத்திலிருந்து எம்முடன் சேர்ந்து நடப்பதற்கான உங்கள் விருப்பத்தை தெரிவு செய்து எம்முடன் பதிவு செய்து கொள்ளலாம்.

அத்துடன் பங்குபற்றுபவர்கள் எதுவித செலவுமின்றி இந்த வழித்தடத்திற்கு தமது ஆதரவைத் தெரிவித்துக் கொள்ளும் பொருட்டு வழி நெடுக எந்த இடத்திலும் சேர்ந்து கொள்ளலாம். பயணவழி தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ளவும் பதிவு செய்து கொள்வதற்கும் நன்கொடை வழங்குவதற்கும் எமது இணையதளம்  traisl.com இனைப் பார்வையிடமுடியும்.

trial_as_one-cancer_treatment_fund-2-673x505

Related posts: