புற்றுநோய்த் தேங்காய் எண்ணெய் மலேசியாவுக்கு மீள ஏற்றப்பட்டது!

Monday, April 12th, 2021

மலேசியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட புற்றுநோய் பதார்த்தமான அஃப்லாடொக்சின் அடங்கிய தேங்காய் எண்ணெய் மீள் ஏற்றுமதிக்காக கொழும்பு துறைமுகத்தில் உள்ள SAGT முனையத்தில் நங்கூரமிடப்பட்ட பாபரா கப்பலில் ஏற்றப்பட்டுள்ளது.  

இன்று (12) காலை 9.30 மணியளவில் இந்த செயல்முறை மேற்கொள்ளப்பட்டதாக சுங்க ஊடக பேச்சாளர் சுங்க பிரதி பணிப்பாளர் சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.

கடான ரிபயினரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான தேங்காய் எண்ணெய் அடங்கிய 6 கொள்கலன்களே இவ்வாறு மீள் ஏற்றப்பட்டுள்ளன.

சுங்க பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் பேரில், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்ரிய , சுங்கத் தடுப்புப் பிரிவு மற்றும் மத்திய சுங்க ஆய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு கொழும்பு துறைமுகத்தில் உள்ள SAGT முனையத்திற்கு இதற்காக வருகை தந்துள்ளனர்.

முன்பதாக குறித்த தேங்காய் எண்ணெய் தொகை கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி இறக்குமதியாளரின் தனியார் கிடங்கிலிருந்து சுங்க அதிகாரிகளின் மேற்பார்வையில் கீழ் கொழும்பு துறைமுகத்தில் உள்ள SAGT முனையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இன்நிலையில் தேங்காய் எண்ணெயைக் கொண்டு செல்லும் பாபரா கப்பல் இன்று மாலை 5.00 மணிக்கு கொழும்பு துறைமுக SAGT முனையத்திலிருந்து மலேசியாவுக்கு புறப்பட்டிருந்மை குறிப்பிடத்தக்கது.

Related posts:


சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாட நிதியமைச்சர் அலிசப்ரி தலைமையிலான குழுவினர் இன்று அதிகாலை வோஷிங...
ஆகஸ்ட் மாதம்முதல் இலங்கையில் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன - பிரதமர் எச்சரிக்கை!
இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவராக ரணில் விக்ரமசிங்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூ...