புனரமைக்கப்பட்ட கிரேன்ட் ஒரியன்டல் ஹோட்டல் பிரதமரின் தலைமையில் திறந்து வைப்பு!

Friday, March 19th, 2021

நான்காவது தடவையாகவும் புனரமைக்கப்பட்ட 183 வருட கால பழமையான தொல்பொருள் சிறப்புமிக்க கொழும்பு கோட்டை கிரேன்ட் ஒரியன்டல் ஹோட்டல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமைத்துவத்தில் திறந்துவைக்கப்பட்டது.

அத்துடன் நல்லாட்சி அரசாங்கத்தில் கிரேன்ட் ஒரியன்டல் ஹோட்டலை விற்பதற்கான விலைமனு கோரலை விடுக்குமாறு அரச தொழில் அபிவிருத்தி அமைச்சில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

இவ்விடயங்களை கருத்திற் கொண்டு கிரேன்ட் ஒரியன்டல் ஹோட்டலை பாதுகாக்கும் நோக்கில் அதனை புனரமைத்து நாட்டு மக்களுக்கு பொறுப்பாக்க வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரான பிரதமர் அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கமைய, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள செலன்டிவா இன்வெஷ்ட்மன் நிறுவனம் மற்றும் இலங்கை அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனம் ஆகிய நிறுவனங்கள் ஒன்றினைந்து கிரேன்ட் ஒரியன்டல் ஹோட்டலின் நான்கு மாடிகளை கொண்ட கட்டிடம் புனரமைக்கப்பட்டுள்ளது. புனரமைப்பு பணிகளுக்காக 225 மில்லியன் நிதி செலவு செய்யப்பட்டுள்ளது.

இக்கட்டிடத்துக்கு மேலதிகமாக கொழும்பு நகரில் உள்ள பல கட்டிடங்கள் அதன் பழமையினை பேணும் வகையில் புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் ஒன்றினைத்து கொழும்பு நகரின் மரபுரிமைகளை சதுக்கமாக்கி பிறிதொரு வலயமாக பெயரிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

.

Related posts:


நுண்நிதிக் கடனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட செயலகங்களூடாக சிறப்பு திட்டம் - அமைச்சர் ஷேஹான் சேம...
மடு திருத்தல ஆடித் திருவிழாவில் 30 பக்தர்களுக்கே அனுமதி - வெளிமாவட்ட பக்தர்களுக்கு அனுமதியில்லை!
விவசாயம் மற்றும் சேவை வழங்கலில் மட்டுமல்லாது கைத்தொழில் துறையிலும் நாட்டை அபிவிருத்தி செய்வது இலக்கு...