இலவசக் கல்வியைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கையை விடுங்கள் – முன்னாள் கல்வி அமைச்சர் வலியுறுத்து!

Friday, February 15th, 2019

இலவசக் கல்வியைத் தனியார் மயமாக்கி நடுத்தர மக்களின் கல்வி நிலையைப் பாதிக்கும் செயற்பாடுகளை கல்வி அமைச்சு முன்னெடுக்கின்றது.

இதுவரை காலமும் இலவசக் கல்விக்குத் தனியார் துறை எவ்வளவு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஆதார பூர்வமாகக் குறிப்பிட முடியும். இந்தச் சவாலை எதிர்கொள்ள அகிலவிராஜ் காரியவசம் தயாரா என்று பந்துல குணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.

அரச அனுமதி பெற்றுள்ள தனியார் பாடசாலைகளின் கிளை பாடசாலைகளை நாடு முழுவதும் ஆரம்பிப்பதற்கு கல்வியமைச்சு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்துள்ளமை இலவசக் கல்விக்கு எதிர்காலத்தில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். இந்த விடயத்தில் கல்வி அமைச்சர் பொறுப்புடன் செயற்பட வேண்டும். தற்போது தனியார் பிரபல பாடசாலைகள் 85 காணப்படுகின்றன. இந்தப் பாடசாலைகளின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் ஆசிரிய ஆள்சேர்ப்பு விடயங்களை அந்தப் பாடசாலையின் நிர்வாக முகாமைத்துவ குழுவே  தீர்மானிக்கும். அரசின் தீர்மானங்கள் ஏதும் இந்தப் பாடசாலைகளின் நிர்வாகத்தில் செல்வாக்குச் செலுத்த மாட்டா. ஆனாலும்  இந்தப் பாடசாலைகள் அனுமதி பெற்றுள்ளன.

வசதி படைத்தவர்கள் தனியார் கற்கையை நாடுவது அவரவர் தனிப்பட்ட விடயம். தனியார் பாடசாலைகளை நாடு முழுவதும் ஆரம்பிக்கக் குறிப்பிட்டளவு அரச அனுமதி கோரியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.

வருமானம் பெறுகின்ற 400 தனியார் பாடசாலைகளை ஆரம்பிக்க அமைச்சரவைப் பத்திரம் ஊடாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவை தேசியப் பாடசாலைகளின் கல்வி நிலையத்தில் பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

தனியார் துறைக்கு ஒருபோதும் இலவசக்கல்வி முறைமையை விட்டுக்கொடுக்க முடியாது. இந்த விடயத்தில் கல்வி கல்வியமைச்சரின் கவனவீனமும் ஒரு காரணம் என்று தெரிவித்துள்ளார்.

Related posts:


அனுமதிப்பத்திரமற்ற பயணிகள் பேருந்துகளுக்கான அபராதம் அதிகரிப்பு - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!
நாட்டில் நிலவி வரும் கடுமையான வெப்பநிலை இந்த மாத இறுதி வரையில் நீடிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்...
எமது ஆட்சியில் வழங்கிய மாகாண சபைத் தேர்தல் உரிமையைக் கூட நல்லாட்சி அரசாங்கம் பாதுகாக்கவில்லை - இராஜா...