புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்!

தமிழ் – சிங்கள புத்தாண்டு காலத்தில் பயணங்களை மேற்கொள்பவர்களின் வசதி கருதி 21 விசேட தொடருந்து சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் இந்த விசேட தொடருந்து சேவை முன்னெடுக்கவுள்ளதாக பதில் தொடருந்து பொது முகாமையாளர் டபிள்யூ. ஏ. டி. எஸ் குணசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், அனைத்து நீண்ட தூர தொடருந்து சேவைகளும் வழமைப் போல் இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, நாளைமுதல் நீண்ட தூர பயணங்களுக்காக மேலும் 200 பேருந்துகளும் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளாமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பாடசாலைகளில் பிற நாட்டு மொழிகளை கற்பிக்க அமைச்சரவை அனுமதி!
தாதியர்களின் கற்கை நெறி தரமுயர்த்தப்படும் - உறுதி அளித்தார் பிரதமர் மகிந்த ராஜபக்ச!
அமெரிக்கா டொலருக்கு நிகராக ரூபா பெறுமதி இன்று உயர்வு!
|
|