புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்!

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன.
இலங்கை போக்குவரத்து சபையினால், 2000க்கும் அதிகமான மேலதிக பேருந்து சேவைகள் நடத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த விசேட போக்குவரத்து சேவை நேற்றுமுதல் எதிர்வரும் 24ம் திகதி வரையில் இடம்பெறும். அதேநேரம், இந்த காலப்பகுதியில் அரச பேருந்து பணியாளர்களது விடுமுறைகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
இதேவேளை இன்று முதல் விசேட தொடருந்து சேவைகளும் நடத்தப்படவுள்ளதாக தொடருந்து திணைக்கள மேலதிக முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
உணவுப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன - உணவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!
இலங்கையின் வருவாயை 10 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை வெரிட்டே ரிசேர்ச் நிறுவனம் வெளியிடு!
இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் யாழ் இந்திய துணைத் தூதரகத்...
|
|