புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள்!

Wednesday, April 13th, 2016
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மக்களின் போக்குவரத்து வசதிகருதி இன்று நண்பகல் 12 மணிவரை விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கபட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பொது முகாமையாளர் ராஜா குணதிலக்க தெரிவித்துள்ளார். நண்பகல் 12 மணிக்கு பின்னர் சாதாரண பஸ் சேவைகள் இடம்பெறும் என அவர் தெரிவித்தார்.

நாளைய தினமும் போக்குவரத்து நடவடிக்கைகள் அனைத்தும் வழமை போன்று இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபையின் பொது முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

மீண்டும் கொழும்பை வந்தடைவதற்கு எதிர்வரும் 17 ஆம் திகதி மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பொது முகாமையாளர் ராஜா குணதிலக்க தெரிவித்தார்.

இதேவேளை பெஸ்டியன் மாவத்தையில் இருந்து தூர இடங்களுக்கு செல்வதற்காக இன்று நண்பகல் முதல் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து சபையின் தலைவர் எம்.பி.ஏ.ஹேமசந்திர தெரிவிககின்றார்.இன்று நண்பகல் வரை அதிக பயணிகள் பயணிப்பார்கள் என எதிர்ப்பாக்கபடுவதால் விசேட பஸ் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை இன்றை தினம் விசேட ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.இதன் பிரகாரம் பண்டாரவளை , மஹவ, காலி மற்றும் மாத்தறை நோக்கி இந்த விசேட ரயில் சேவைகள் இடம்பெறும் என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் சுட்டிகாட்டியுள்ளது.

Related posts: