நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி – மத்திய வங்கியின் ஆளுநர்!

Wednesday, March 21st, 2018

கடந்த ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தில்  தெளிவான வளர்ச்சி இடம்பெற்றிருப்பதாக  இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித்குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிதி உள்ளடக்கத்தை அதிகரிக்க மத்திய வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் முக்கிய அம்சமாக நிதி நிறுவனங்களின்எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டமையாகும். கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவோருக்கு அதற்கான வசதிகளை வழங்குவது இலக்காகும்.

கடன் பெறுவதை இலகுவாக்குமாறும் நுண்கடன் மற்றும் சிறிய நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்கும் முறைமையைஊக்குவிக்குமாறும் மத்திய வங்கி வலியுத்தியிருப்பதாக  இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: