புத்தாண்டை முன்னிட்டு இன்றுமுதல் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுப்பு – போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு!
 Friday, April 9th, 2021
        
                    Friday, April 9th, 2021
            
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக மேலதிக பேருந்து மற்றும் ரயில்களை சேவையில் ஈடுபடுத்தியிருப்பதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் இன்றுமுதல் எதிர்வரும் 16 ஆம் திகதிவரை இந்த விசேட ரயில் மற்றும் பேருந்து சேவைகள் இடம்பெறும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
வழமையாக பயணிக்கும் எண்ணிக்கையை விட மேலதிகமாக ஆயிரத்து 192 அரச பேருந்துகளும் 21 ரயில்களும் சேவையில் ஈடுபடுகின்றன. மேலதிக ரயில்கள் 57 பயண சேவைகளில் ஈடுபடுகின்றன.
இதுதவிர ஆயிரத்து 800 தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன் மக்களுக்கு உயர்ந்தபட்ச சேவையை வழங்கும் வகையில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள போக்குவரத்து அமைச்சு, கொரோனா தொற்று பரவலை கருத்திற்கொண்டு பேருந்துகளின் ஆசன எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகள் பயணிக்க வேண்டும் என்றும் மோட்டார் வாகன பிரதி பொலிஸ் மா அதிபர் இதனை அவசியம் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        