புத்தாண்டு நிகழ்வுகளுக்கு முன்அனுமதி பெறுவது அவசியம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

புத்தாண்டு நிகழ்வுகளை மேற்கொள்ள முன் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமானது என தெரிவித்தள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண கோவிட் தொற்று பரவுகை காரணமாக இந்த அறிவிப்பு வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் புத்தாண்டு விழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்துவதற்கு முன் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், புத்தாண்டு விசேட நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புத்தாண்டு விழாக்களை நடத்துவதற்கு சுகாதார தரப்பு மற்றும் பொலிஸாரிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ள ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண விழா ஏற்பாட்டாளர்கள் சுகாதார விதிமுறைகளை முழு அளவில் கடைபிடிக்க வேண்டியது அவசியமானது என்றும் மக்கள் வீடுகளிலேயே புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|