One-text initiative பிரதிநிதிகள் ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதனுடன் கலந்துரையாடல்!

Saturday, October 14th, 2023


…..
இலங்கை மாகாண சபை சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகள் தொடர்பாக One-text initiative இன் பிரதிநிதிகள் மாவட்ட அமைப்பாளரை
சந்தித்தனர்.

இலங்கை மாகாண சபை சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகள் தொடர்பாக One-text initiative (OTI) அமைப்பின் பிரதிநிதிகள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் வை. தவநாதனை சந்தித்து கலந்துரையாடினர்.

கிளிநொச்சி மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இலங்கை மாகாண சபை சட்டத்தில் ஏற்படுத்தப்படும் திருத்தங்கள் தொடர்பான முன்மொழிவுகள், 13 ஆம் திருத்தச்சட்டத்தின் மூலமாக தமிழ் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள், நிதி ஆணைக்குழு அமைத்தல், முதலமைச்சர் நிதியம், மாகாண சபை சட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட/மீள பெறப்பட்ட அதிகாரங்களை மீண்டும் மாகாண சபைகளுடன் இணைத்தல்.

மாகாண சபையின் செயல்திறனை அதிகரிப்பது, மாகாணத்தின் காணி அதிகாரம் என்பது ஒரு நிர்வாகத்தின் கீழ் இருக்க அதை தவிர்த்து பல்வேறு தரப்பினரிடன் காணப்படுவதை தவிர்க்கவேண்டும்( LTC, தொல்பொருள் திணைக்களம், வனவள திணைக்களம், வனஜிவராசிகள் திணைக்களம்) போன்ற விடையங்கள் தொடர்பாக One-text initiative (OTI) அமைப்பின் பிரதிநிதிகளிடம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் வை. தவநாதன் கலந்துரையாடினார்.

இவ் சந்திப்பில் One-text initiative (OTI) அமைப்பின் சார்பாக சட்டதரணி சிரால் லக்திலக்க, சட்டதரணி எ.எம் பாயிஸ், ஹரேந்திர தசாநாயக்க, ராம், மற்றும் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.
0000

Related posts: