புத்தாண்டு கொத்தணியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்ளை நாளாந்தம் அதிகரிப்பு – சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டு!

Monday, June 7th, 2021

இலங்கையில் இதுவரை 2 இலட்சத்து 5 ஆயிரத்து 333 பேர் கொவிட் 19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்த 976 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவருமே புத்தாண்டு கொத்தணியைச் சேர்ந்தவர்கள் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் திவுலபிட்டிய, பேலியகொடை, சிறைச்சாலை மற்றும் புத்தாண்டு கொத்தணிகளில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 98 ஆயிரத்த 654ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் புத்தாண்டு கொத்தணியில் மாத்திரம் ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 479 பேர் கொவிட் தொற்றுறுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை சிறைச்சாலைக் கொத்தணியில் 6 ஆயிரத்து 355 பேரும், பேலியகொடை கொத்தணியில் 82 ஆயிரத்து 785 பேரும் திவுலபிட்டிய கொத்தணியில் 3 ஆயிரத்து 59 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 4 ஆயிரதது 447 இலங்கையர்களுக்கும், 318 வெளிநாட்டவர்களுக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு இதுவரை கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 51 ஆயிரத்த 532 கொவிட் தொ்றறாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே நேற்று 20 ஆயிரத்து 403 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் 36 ஆயிரத்து 333 பேர் கொவிட் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளதுடன் ஆயிரத்த 453 பேர் கண்காணிப்பில் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

அதேநேரம் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்த 172 பேர் நேற்று கொவிட் தொற்றில் இருந்து குணமடைந்து வெளியேறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள சுகாதார அமைச்சு இதுவரையில் ஒரு இலட்சத்து 67 ஆயிரத்து 304 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்து சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை கடந்த 24 மணிநேர தகவல்களின் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 46 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த உயிரிழப்புகள் கடந்த மே மாதம் 17 ஆம் திகதிமுதல் ஜூன் 05 ஆம் திகதிவரை பதிவாகியுள்ளன எனவும் அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும் நேற்றையதினம் கொரோனா உயிரிழப்புகள் எவையும் பதிவாகவில்லை என்றும் தேசிய தொற்று நோயியல் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஆயிரத்து 742 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: