புதிய போட்டி சந்தைகளை கண்டுபிடித்து வெளிநாட்டு முதலீடுகளையும் மூலதனத்தையும் ஈர்ப்பதே இலங்கையின் நோக்கமாகும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
Wednesday, August 30th, 2023
புதிய போட்டி சந்தைகளை கண்டுபிடித்து வெளிநாட்டு முதலீடுகளையும் மூலதனத்தையும் ஈர்ப்பதே இலங்கையின் நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நிலையான அபிவிருத்தி சபை சம்மேளனத்தில் உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தாய்லாந்து, இந்தோனேஷியா, வியட்நாம் போன்ற நாடுகளின் பாதையை பின்பற்றி, வெளிநாட்டு முதலீடு மற்றும் மூலதனத்தை ஈர்ப்பதன் மூலம் பொருளாதாரத்தை மறுசீரமைப்பான இலங்கையின் முயற்சிகள் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
Related posts:
பன்றிக்காய்ச்சல் தொற்று குடாநாட்டில் 5000 ஐ தாண்டியது -மருத்துவர் யமுனாந்தா தகவல்!
இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுப்பதற்கு கடுமையான சட்டம் - கடற்றொழில் இர...
வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையில் சனத்தொகையில் வீழ்ச்சி - பதிவாளர் திணைக்களத்தின் புள்ளி விபரத்தகவ...
|
|
|


