பன்றிக்காய்ச்சல் தொற்று குடாநாட்டில் 5000 ஐ தாண்டியது -மருத்துவர் யமுனாந்தா தகவல்!

Thursday, March 2nd, 2017

யாழ்ப்பாண மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் தொற்றுக்குள்ளானோர் தொகை 5000ஐ தாண்டியிருக்கலாம் என அசசம் வெளியிடுகிறார் யாழ்.போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி மருத்துவர் சி.யமுனாந்தா.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை, நேற்று செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களிலும் யாழ்.போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற 2100 பேரில் 1200வரையானோருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் காணப்படுவதாக மேலும் அவர் தெரிவித்தார்.

மேலும் போதனா வைத்தியசாலை தவிர்ந்த ஏனைய அரச வைத்தியசாலைகள் மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்குட்படுத்தப்படுவோர் தொகையுடன் ஒப்பிட்டளவில் இதன் தாக்கம் யாழ்.குடாநாட்டில் அபாயகட்டத்தை தாண்டியிருப்பதுடன் மருத்துவ அவசரகால நிலையாக பிரகடனம் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பன்றிக்காய்ச்சல் அபாயம் அதிகரித்திருப்பதால் பொது மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்த்தல், விழாக்கள் மற்றம் பெரும் தொகையானோர் ஒன்று கூடும் இடங்களை தவிர்த்தல் போன்றவற்றால் சுவாசத் மற்றும் தொடுகை மூலம் பரவும் வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும். மேலும் தற்போது பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் வருவோர் தொகை அதிகரித்திருப்பதால் வெளிநோயளர் பிரிவு பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ளதாகவும் நோய்த்தொற்றுக்குள்ளானவர்கள் பாடசாலை, பொது இடங்கள், அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்த்தல் ஏனையவர்களும் இத் தொற்றுக்குள்ளாகாமல் தடுக்க முடியும்.

குறித்த வைரஸ் காய்ச்சலுக்கு உள்ளானவர்கள் போதிய நீராகாரம் அருந்துவதோடு வைத்தியசாலைகளில் ஜீவநீர் பெற்று பருகுதல் வேண்டும் மேலும் தொண்டைநோ. உடம்பு உளைவு, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சென்று பரிசோதிப்பதன் மூலம் இதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த முடியம் என்றார்.

25-1424838904-swine-flu-1-600

Related posts:


மரண விசாரணை அதிகாரிகளுக்கும் கொரோனா தொற்று பாதுகாப்பு உடைகள் வேண்டும் - திடீர் மரண விசாரணையாளர் தொடர...
இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகரின் நியமனம் தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது – இந்தி...
மக்கள் நடத்தும் அமைதியான ஆர்ப்பாட்டங்களில் வன்முறை கும்பல்கள் புகுந்து நாட்டை சீரழிக்க இடமளிக்க முடி...