புதிய பயங்கரவாத தடைச் சட்ட விவாதம் அடுத்த வாரம்- பிரதமர்!

புதிய பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பிலான முதல் வரைவு தொடர்பான விவாதம் அடுத்தவாரம் இடம் பெறும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
நியூசிலாந்தின் பிரதமர் ஜோன் கீயை சந்தித்ததை அடுத்தே பிரதமர் இதனைதெரிவித்துள்ளார். இரு பிரதமருக்கும் இடையிலான சந்திப்பின் முன்னதாக,சர்வதேச பொது மன்னிப்புச் சபை,இலங்கையில் இடம்பெற்ற காணாமல் போதல்கள் மற்றும்மனித உரிமை மீறல்கள் குறித்து ரணிலுடன் உரையாற்றுமாறு ஜோன் கீயிடம்தெரிவித்துள்ளதாக குறித்த ஆங்கில ஊடகம்செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் இலங்கையில் இருந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வதுதொடர்பிலும் பிரதமர் ரணிலுடன் விவாதிக்கமாறு சர்வதேச பொது மன்னிப்புச் சபையின்நியூசிலாந்து நாட்டின் நிர்வாக இயக்குனர் GrantBayldon தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக காணாமல் போதல்கள் தொடர்பில் புதிய சட்டம் ஒன்று தேவை, காரணம்இவற்றை விசாரிப்பது மிக கடினம் என Grant Bayldon மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ரணிலுடன் உரையாடிய ஜோன் கீயிற்கு பதிலளித்த இலங்கைபிரதமர்,காணாமல் போனவர்களுக்காக அரசாங்கம் காணாமல் போனோர் அலுவலகம் அமைத்துள்ளதாகவும்இந்த விடயம் தொடர்பிலான விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் மனித உரிமை மீறல்கள் குறைந்து கொண்டு வருவதாகவும் அடுத்தவருட மார்ச் மாதத்திற்குள் இந்த நிலைமை முற்றாக மாறி விடுவதாகவும் ரணில்தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|