புதிய தலைவருக்கு மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு!
Wednesday, October 4th, 2017
இலங்கை மருத்துவ சபைக்கு புதிய தலைவராக பேராசிரியர் கொல்வின் குணரத்னவை நியமித்தமை தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவ சபைக்கு தலைவர் ஒருவர் இல்லாத காலப்பகுதியினுள் அதன் தலைவராக பேராசிரியர் கொல்வின் குணரத்ன நியமிக்கப்பட்டமை தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றமையை தொடர்ந்து சைட்டம் எதிர்ப்பு தொழிற்சங்கமும் அதற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டது.இந்த நியமனம் தொடர்பில் தமது சங்கத்தின் மத்திய செயற்குழு, இன்று கூடி தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக மருத்துவ சங்கத்தின் ஊடக பேச்சாளர் மருத்துவர் ஆனந்த அளுத்கே எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.
Related posts:
சிறுமியை தாக்கிய தாய்க்கு விளக்கமறியல் !
நாடு முழுவதும் நாளை விசேட பாதுகாப்பு - பிரதி பொலிஸ் மா அதிபர் அறிவிப்பு!
யாழில் தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பாக விசேட தீர்மானம் நாளை!
|
|
|


