புதிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் உள்ளூராட்சி தேர்தல் – அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அறிவிப்பு!
Monday, February 21st, 2022
இளைஞர்களுக்கான சிறந்த பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் வகையில் கலப்பு தேர்தல் முறைக்கான புதிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதனை தெடர்ந்து உள்ளூராட்சி தேர்தல் நடைபெறும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மக்கள் ஐக்கிய முன்னணியின் இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்..
அத்துடன் தனது தலைமையிலான தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு தேர்தல் சீர்திருத்தங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்பரும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நடவடிக்கைகள் நிறைவுபெற்றதும் உளூராட்சித் தேர்தலை நடத்துவது குறித்து பரிசீலிக்க முடியும் எனவம் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அரியாலை பகுதியில் புகையிரத விபத்து - இராணுவ வீரர் பலி!
மக்கள் நலன்கள் புறக்கணிப்பு-நெடுந்தீவு உபதவிசாளர் தெரிவு ஒத்திவைப்பு!
ஒரு இலட்சத்து 60 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 6 ஆம் திகதி ஏலத...
|
|
|


