மக்கள் நலன்கள் புறக்கணிப்பு-நெடுந்தீவு உபதவிசாளர் தெரிவு ஒத்திவைப்பு!

Tuesday, June 12th, 2018

நெடுந்தீவு பிரதேச சபையின் உபதவிசாளர் காலமானதை அடுத்து ஏற்பட்டிருந்த உபதவிசாளர் வெற்றிடத்தை நிரப்புவதற்கான சபை அமர்வு இன்றையதினம் நடைபெற்றபோது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் சபையை புறக்கணிப்பு செய்தமையால் தெரிவு  ஒத்திவைக்கப்பட்டது.

இன்று காலை நடைபெற்ற இந்த கூட்டம் வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் முன்னிலையில் நடைபெற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரது ஆளுகைக்குள் இருக்கும் குறித்த பிரதேச சபை வினைத்திறனற்தாகவும் தவிசாளர் மற்றும் பங்காளிகளின் செயற்பாடுகள் தன்னிச்சையாக இருப்பதாகவும் குறித்த சபை நடவடிக்கைகள் மக்கள் நலன்களை முன்னிறுத்தியதாக அமையப் பெறவில்லை என்றும் பரவலாக பொதுமக்களாலும்  புத்திஜீவிகளாலும் விமர்ச்சிக்கப்பட்டு வந்தது.

அத்துடன் குறித்த பிரதேசத்தின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதில் அக்கறைகாட்டுவதில்லை என்றும் இந்த நிலையிலேயே மக்களது நலன்களை முன்னிறுத்தி குறித்த சபையின் உபதவிசாளர் தெரிவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர்.

இதனையடுத்து சுயேட்சைக் குழு உறுப்பினர்களும் வெளியேறியிருந்தனர். இந்நிலையில் உபதவிசாளர் தெரிவை பிற்போடுவதாக ஊள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.

Related posts: