புதிய அரசியல் யாப்பு தேவையில்லை என்பது பொய் -பிரதமர்

Friday, October 20th, 2017

மல்வத்தை மஹாநாயக்கர் நாட்டில் இல்லாத வேளையில், புதிய அரசியல் யாப்பு தேவையில்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டமை பிழையானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவரது உத்தியோகப்பூர்வ முகநூலில் பதிவொன்றினை பதிவு செய்துள்ளார்.

அரசியல் யாப்பு வழிநடத்தலிற்கு குழுவின் இடைக்கால அறிக்கையை, இலங்கை ஊடக கல்லூரி உள்ளிட்ட 3 நிறுவனங்கள் பகுப்பாய்வு செய்து தயாரித்த அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கருத்து வெளியிட்டிருந்தார்.

அஸ்கிரிய மற்றும் மஹாநாயக்க தேரர்கள் ஒன்று கூடி, தற்போதைய சூழ்நிலையில் புதிய அரசியல் யாப்பு ஒன்றோ, யாப்பின் திருத்தமோ தேவையில்லை என்று தீர்மானித்ததாக செய்திகள் வெளியாகின.

இந்த செய்தியை பல ஊடகங்கள் பிரதான தலைப்புச் செய்தியாக வெளியிட்டு மல்வத்தை மஹாநாயக்கரின் படத்தையும் பிரசுரித்திருந்தன. ஆனால் அவர் நாட்டிலேயே இல்லை. இன்று(19) காலையும் தாம் அவருடன் கலந்துரையாடியதாகவும் அவர் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


கொரோனா அனர்த்த காலத்தில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 45 பில்லியன் இழப்பு - மின்வலு மற்றும் எரிச...
“ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு 2022 பாதிட்டினூடாக கட்டம் கட்டமாக தீர்வு”- இராஜாங்க அமைச்சர் சு...
அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணானவை அல்லவென சட்டமா அதிபர் தெரிவிப்பு - பசு வதையை தடைசெய்தல் தொடர்பான...