புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்ய நடவடிக்கை ஆரம்பம் – தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தகவல்!

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புன்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதற்கான புதிய வரையறைகளை நிர்ணயித்து வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ராஜகிரியவில் உள்ள தலைமையகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் பின் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாண்டு மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறுமாக இருந்தால் அதற்காக நான்காயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
ஜனவரி 11 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதே தினத்தன்று மாலையில் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுடன் கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|