புதிய அரசியல் அமைப்பு திருத்த உப குழுவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 06 பேர் விலகல்!

புதிய அரசியல் அமைப்பு திருத்த உப குழுவில் இருந்து ஒன்றிணைந்த எதிர்க் கட்சி விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நானயக்கார, பந்துல குணவர்தன,கெஹெலிய ரம்புக்வெல்ல,தாரக பாலசூரிய,விதுர விக்கிரமநாயக்க மற்றும் பவித்ரா வன்னியாரச்சி ஆகியோரே குறித்த குழுவிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று(16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
Related posts:
இயந்திரம் செயலிழப்பு - நாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை!
சிறுவர் தொடர்பான முறைப்பாடுகளில் 40,668 முறைப்பாடுகளுக்கு இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை - கோப் குழு ...
பட்டினியால் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 11 பேர் பலி - ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை!
|
|