புதிய அரசின் புதிய ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

Wednesday, September 30th, 2020

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி, மூலதனச்சந்தை, பொது முயற்சியாண்மை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று 30 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தள்ளார்.

மேலும் அரசாங்கம் என்ற ரீதியில் பொருளாதார அபிவிருத்தியை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் சுற்றுலாத் துறையை தவிர்ந்த ஏனைய அனைத்து துறைகளும் தற்போது சிறந்த முறையில் முன்னேற்றம் கண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இதன்போது தெரிவித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு 91 வீதமாக காணப்பட்ட தேசிய உற்பத்திக்கான கடன் 2014 ஆம் ஆண்டு 70 வீதமாக குறைவடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தற்போது தலா தேசிய உற்பத்திக்கான கடன் வீதம் மீண்டும் அதிகரித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் சுட்டிக்கசாட்டியுள்ளார்.

எனவே கடன் தொகையை குறைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: