புகையிரதம் மோதி இளைஞர் பலி!
Thursday, August 24th, 2017
காங்கேசன் துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதம் மோதியதில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார் .
புகையிரதம் சுன்னாகம் புகையிரத நிலையத்தை நெருங்கிக்கொண்’டிருந்த சமயம் புகையிரதப் பாதையில் நின்ற இளைஞனை புகையிரதம் மோதியதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்
ஆனாலும் சம்பவத்தில் பலியானவர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் சுன்னாகம் புகையிரத நிலையத்தில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து நடைபெற்ற இடத்திற்கு இருபுறத்திலும் கடவைகள் இருக்கும் நிலையில் குறித்த சம்பவம் தற்கொலை முயற்சியாக இருக்கும் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
அரிசி ,சீனிக்கு இன்றுமுதல் உயர்ந்தபட்ச சில்லறை விலை - நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அறிவிப்...
‘குடு’ காரர்களே காலி முகத்திடல் போராட்டக்களத்தில் தங்கியுள்ளனர் - கட்டுப்படுத்துவதற்கு அவசரகால சட்டம...
தலைநகரின் முக்கிய கேந்திர மையங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம் – ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்த...
|
|
|


