புகைக்கசிவு தர நிர்ணய சான்றிதழை வாகனத்தில் வைத்திருப்பது கட்டாயம்!

வாகனம் புகைக்கசிவு தரநிர்ணயத்திற்கு அமைவானது என உறுதிப்படுத்தப்பட்டு வழங்கப்படும் சான்றிதழ் எந்நேரமும் வாகனத்தில் வைத்திருக்கப்பட வேண்டும் என முல்லைத்தீவு போக்குவரத்துப் பொலிஸ் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
போக்குவரத்துக் கடமையில் ஈடுபடும் பொலிஸார் கடந்த காலங்களில் வாகன வருமான அனுமதிப்பத்திரம், சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி அட்டை ஆகியவற்றை மட்டும் பரிசோதித்து வந்தனர். தற்பொழுது வாகனப் புகைக்கசிவு தரநிர்ணய சான்றிதழையும் பரிசோதிக்கின்றனர்.
எனவே சாரதிகள் புகைக்கசிவு தரநிர்ணய சான்றிதழை வாகனத்துடன் எடுத்துச் செல்லுமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
விபத்தில் பலியானவர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி அஞ்சலி மரியாதை!
எவருடனும் டீல் வைத்துக் கொள்ளும் அரசியல் கலாசாரம் எம்மிடம் இல்லை - அமைச்சர் நாமல் ராஜபக்ஷ!
'பிளாஸ்டிக் முகாமைத்துவ திறன் மேம்பாடு' திட்டம் தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்து!
|
|
சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் - நிதி இராஜாங்க அமைச்சர்...
முடங்குவதற்கு இனியொரு போதும் இடமளிக்கப்பட மாட்டாது - துறைமுக சேவைகள் சார் தொழிற்சங்கம் அரசாங்கத்திடம...
22 ஆம் திகதிக்கு பின்னர் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்க கூடும் -வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு ...