எவருடனும் டீல் வைத்துக் கொள்ளும் அரசியல் கலாசாரம் எம்மிடம் இல்லை – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ!

Friday, December 11th, 2020

எவருடனும் டீல் வைத்துக் கொள்ளும் அரசியல் கலாசாரம் எம்மிடம் இல்லை என்று விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  

இதன்போது, “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ‘பெயில்’ என்று எதிர்க் கட்சி உள்ளிட்ட அணியினர் கூறி வருகிறார்கள். அவர் உண்மையில் பெயிலா?” என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த நாமல் ராஜபக்ச –

“கோட்டாபய ராஜபக்ஷ பெயிலா, பாஸா என மக்கள் முடிவு செய்து விட்டார்கள். விசேடமாக அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு ஒன்பது மாதத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் எமது அரசை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அமைக்க அதிகாரம் வழங்கியுள்ளார்கள்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி அடைந்துள்ளார் என மக்கள் தீர்மானித்து விட்டது இதிலிருந்து தெரியவருகிறது.” என்றார்.

மேலும், நான் தனிப்பட்ட ரீதியில் எண்ணுவது என்னவென்றால் பஸில் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டிய ஒருவராவார். அவர்தான் நாம் இன்று நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் மொட்டு கட்சியின் நிர்மாணி. அவர் இல்லாவிட்டால் இன்று மொட்டு கட்சி இருந்திருக்காது.

இன்று நாடாளுமன்றத்தில் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அனேகமானோர் அங்கம் வகிக்கிறார்கள். அவ்வாறானோரை நாடாளுமன்றத்துக்கு கொண்டு வருவதே அவரது இலக்காக இருந்தது. இன்று அந்த இலக்கை நாம் அவரால்தான் அடைந்துள்ளோம். என்றும் அவர் மேலம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: