எரிபொருள், மின்சார பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே நம்பிக்கை!

Thursday, March 10th, 2022

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன களஞ்சியசாலைகளில் தற்போது 20,000 தொன் எண்ணெய் இருப்பதாக எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்..

அத்துடன் ஒவ்வொரு நகரத்திலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் 32,000 மெற்றிக் தொன் எரிபொருள் நேற்று (9) மாலைமுதல் இறக்கப்படுகிறதென்றும் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் காமினி லொக்குகே மேலும் தெரிவிக்கையில் –

“கடந்த சனிக்கிழமை எண்ணெய் விநியோகம் தொடங்கியது. தற்போது அனைத்து நகரங்களிலும் உள்ள விநியோக மையங்களுக்கு எரிபொருளை விநியோகம் செய்துள்ளோம்.

இந்தத் திட்டம் வெற்றியடைந்தால், வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் எங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் இருக்காது என்று நான் நம்புகிறேன்.

தேவையான டீசல் மற்றும் எரிபொருளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுகளுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். எனவே, இந்த மின்வெட்டை படிப்படியாகக் குறைக்க முடியும்.

இதேவேளை 5 ஆம் திகதி மின்வெட்டு இருக்காது என நம்பியிருந்தோம். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டாலும், சில இடங்களில் சிறிய அளவிலான மின் இணைப்பு துண்டிக்கப் பட்டுள்ளது.

ஆனால் அடுத்த திங்கள் மற்றும் செவ்வாய்க்குள் மின்சாரம் மற்றும் எண்ணெய் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று நான் நம்புகிறேன். அதற்கு நிதியமைச்சு வலுவான ஆதரவை வழங்கி வருகிறது” என்றும் அவர் தெரிவீத்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: