பி.ரீ.ரீ. வரியை அறவீடு செய்வது குறித்து பரிசீலனை!

Sunday, March 27th, 2016

பெறுமதி சேர் வரியை அரசு அதிகரித்துள்ள நிலையில் பி.ரீ.ரீ எனப்படும் விற்பனை புரள்வு வரியை விதிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் வட மத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

அண்மையில் தெற்கில் நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டில் பி.ரீ.ரீ வரி அறவீடு செய்வது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.  2010ஆம் ஆண்டில் அப்போதைய அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பி.ரீ.ரீ வரியை ரத்து செய்திருந்தது.

மீளவும் வரியை அறவீடு செய்ய சுற்று நிருபம் ஒன்றை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாகாண ரீதியில் இந்த வரி அறவீடு செய்யப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்படி மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு 1 வீத வரியையும், ஆடம்பர பண்டங்களான தங்க நகை, சிகரட் மற்றும் மதுபானம் போன்றவற்றுக்கு 5 வீத வரியையும் அறவீடு செய்ய சாத்தியமுண்டு என செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts: