பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி உத்தரவு – இலங்கை உட்பட 7 நாடுகளுக்கு தடை நீடிப்பு!

இலங்கை உட்பட 7 நாடுகளுக்கு, பிலிப்பைன் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் கறித்த தடையானது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கும் தொடர்ந்தும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக ஆரம்பத்தில் ஏப்ரல் 29முதல் இந்தியா மீது பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது.
பின்னர் இலங்கை உட்பட பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கடந்த மே 7 ஆம் திகதிமுதல் பயணத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனா தொற்று அச்ச நிலைமையைக் கருத்திற் கொண்டு, பிலிப்பைன் ஜனாதிபதியி ரோட்ரிகோ டூர்ட்டேயினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!
வாகன விபத்துக்களால் இந்த வருடம் 564 பேர் பலி - காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!
கடும் சூறாவழி - அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் கடுமையாக பாதிப்பு!
|
|