பிறப்புச்  சான்றிதழில் பேதம் வேண்டாம் – அமைச்சர் வஜிர அபேவர்தன!

Saturday, September 29th, 2018

பிறப்புச் சான்றிதழ்களை வழங்கும் போது சிங்களம், தமிழ், முஸ்லிம் என இன அடையாளங்களை மாற்றி இலங்கையர் என்று குறிப்பிடப்படுவதை ஆரம்பிக்க வேண்டும் என உள்நாட்டு அலுவலகள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரியல் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஒருவர் பிறந்த உடனேயே பிறப்புச் சான்றிதழில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என பிரிக்கப்படுகின்றனர். இந்த நடைமுறையை நிறுத்த வேண்டும்.

இந்த துறை எமது அமைச்சின் கீழ் உள்ளது. நாம் இனிவரும் காலங்களில் பிறப்புச் சான்றிதழ்களில் இலங்கையர் என்று எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாம் இனங்களாக பிரியாது அனைவரும் மனிதர்கள் என்ற அடிப்படையில் பணியாற்ற வேண்டும். இதன் மூலம் மட்டுமே நாட்டை முன்னேற்ற முடியும். நாம் இலங்கையர்களாக எண்ண வேண்டும்.

இலங்கையர்களாக செயற்பட வேண்டும். ஒரே நாட்டு மக்களாக ஒரே இலங்கையர்கள் என்ற வகையில் முன்னோக்கி செல்ல வேண்டும் என்பதே எமது தேவை.

இனங்களாக பிரிந்து எம்மால் என்றுமே நாட்டை கட்டியெழுப்ப முடியாது. எமது பௌத்தர்கள் இந்து கோயில்களுக்கு செல்கின்றனர். இந்துக்கள் பௌத்த தலங்களுக்கு செல்கின்றனர்.

நாம் அனைவரும் அனைவரையும் மதித்து வாழ வேண்டும் எனவும் அமைச்சர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

இலட்சியமும் கொள்கைப்பற்றும்  இல்லாதவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் - தொண்டமானாறு பகுதி மக்கள் ...
கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக இருந்தால் மீண்டும் "கொரோனா" – எச்சரிக்கின்றார் உல...
சில்லறை எரிபொருள் சந்தையில் பிரவேசிக்கத் திட்டமிட்டுள்ள இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள், - QR இன்றி எர...

அமைச்சரவைத் தீர்மானத்தினை உடனடியாகச் செயற்படுத்துமாறு வலியுறுத்தி யாழில் கையெழுத்துப் போராட்டம்!
இந்திய தலைநகர் புதுடில்லியில் ஆரம்பமானது பாதுகாப்பு, நிதி மற்றும் பொருளாதாரம் குறித்த சர்வதேச மாநாடு...
போதைப்பொருள் பாவனை அதிகரித்துவருவது வருத்தமளிக்கின்றது - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர்...