பிரித்தானிய விசா நடைமுறையில் மாற்றம்!

Saturday, November 5th, 2016

பிரித்தானிய விசா நடைமுறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, இனி அங்கு செல்லுவோருக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் குடியேறும், ஐரோப்பிய யூனியனில் அல்லாத மற்ற நாட்டவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் விசா நடைமுறையில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் 24ம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த மாற்றங்கள் குறித்து இங்கிலாந்து உள்துறை அலுவலகம் நேற்று முன்தினம் இரவு அறிவித்துள்ளது.

இதற்கமைவாக பிரிட்டனில் வசிக்கும் வெளிநாட்டவர்கள், தங்களின் பெற்றோருக்கோ அல்லது மனைவிக்கோ நிரந்தர குடியுரிமை விசா கேட்டு விண்ணப்பிக்க இரண்டரை ஆண்டு காலம் அங்கு தங்கியிருக்க வேண்டுமென்ற விதிமுறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி 5 ஆண்டுகள் தங்கியிருந்த பிறகே நிரந்தர குடியுரிமை விசா கேட்டு விண்ணப்பிக்க முடியும்.

நிறுவனங்களுக்கு ஊடாக  ஊழியர்களை இடமாற்றம் செய்து கொள்ளும் (ஐசிடி) பிரிவில் விசா பெற விண்ணப்பிப்பவர்களின் மாத சம்பளம் ரூ.1.75 இலட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. டயர்-2 பொது பிரிவில் அனுபவமிக்க பணியாளர்களின் சம்பளம் ரூ.2 லட்சமாக அதிகரிக்க்பப்டுள்ளதாக வும் அறிவிக்கபட்டுள்ளது.தற்போது சம்பளத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதால், அதற்கு கீழ் வருமானத்தை பெறுபவர்களால் பிரிட்டன் விசா கேட்டு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ukba

Related posts: