பிரிட்டிஷ் கவுன்சிலின் புதிய செயற்திட்டம்!
Wednesday, March 7th, 2018
ஆங்கில பாட ஆசிரியர்களின் திறமையை அதிகரிக்க ஆங்கில மொழி கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய செயற்றிட்டத்தை பிரிட்டிஷ் கவுன்சில் அறிமுகம்செய்துள்ளது.
மாணவர்களுக்கு உயர்கல்வி கல்வித்துறையிலும் தனியார் தொழில் கல்வியிலும் சிறந்த வாய்ப்பை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும் என்று பிரிட்டிஷ் கவுன்சில்வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டுக்குள் முன்னெடுக்கப்படவுள்ள 14 மாதங்களை கொண்ட திட்டங்களில் ஆங்கில மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்குதிட்டமிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கண்டி, களுத்துறை ஆகிய தேசிய கல்வியியற் கல்லூரிகளில் சுமார் 1000 ஆசிரியர்கள் இதன்கீழ் பயிற்றுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Related posts:
மர்ம காய்ச்சலுக்கான காரணம் கண்டுபிடிப்பு!
பாலூட்டும் தாய்மார் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதனால் எந்தப் பாதிப்பும் கிடையாது – கொழும்பு ஐ.டி.எச் வை...
இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!
|
|
|


