பிரமிட் திட்டங்களில் தாடர்பில் அவதானமாக இருங்கள் – பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு!

Thursday, August 10th, 2023

பிரமிட் திட்டங்களில் நேரடியாக அல்லது நேரடியற்று ஈடுபடுவதில் இருந்து தவிர்த்துக்கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களிடம் கோரியுள்ளது

பிரமிட் திட்டங்கள் குறித்து இன்று (10) இலங்கை மத்திய வங்கி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு “ஏமாந்து விடாதீர்! பாடுபட்டு உழைத்த உங்கள் பணத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள்” என அறிவுறுத்தியுள்ளது.

அதில், இலங்கையில் பிரமிட் திட்டங்கள் சட்ட விரோதமானவை என்றும் பிரமிட் திட்டங்களில் பங்கேற்றல் தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 8 பிரமிட் திட்டங்கள் குறித்து ஊடகங்கள் வாயிலாக தெளிவுபடுத்தியுள்ளதாகவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: