பிரதமர் வியட்நாம் பயணம்!

வியட்நாம் பிரதமர் ன்குயென் க்ஷூவன் ஃபுக் விடுத்துள்ள அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை வியட்நாமிற்கான சுற்றுப் பயணத்தினை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த சந்திப்பின் போது குறிப்பாக இலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை மேம்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயினால் விடுக்கப்பட்ட விசேட அழைப்பின் பேரில் தற்போது ஜப்பானிற்கான சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்த சுற்றுப் பயணத்தை நிறைவுசெய்துகொண்டு வியட்நாமிற்கான பயணத்தை தொடரவுள்ளார்.
Related posts:
பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் உலக கத்தோலிக்க திருச்சபை திருப்பீடத்தின் தூதுவர் சந்திப்பு!
பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் - பெப்ரல் அமைப்பு தேர்தல்...
வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் கணினிக் கொள்வனவில் 27 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா முறைகேடு?
|
|