பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலையீடு – கோழி முட்டையின் விலையில் மாற்றம் – அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவிப்பு!

கோழி முட்டையின் விலையினை 2 ரூபாவால் குறைக்க தீர்மானித்தள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக கோழி முட்டையின் விலையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டதால் குறித்த விடயம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
இதன் பிரகாரம் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ விடுத்த பணிப்புரைக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய கோழி முட்டையொன்றை 18 ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தீர்மானித்தள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கடும் வறட்சி - யாழில் 7311 குடும்பங்கள் பாதிப்பு!
முக்கிய பிரச்சினைகள் பொருளாதாரத் துறையில் மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் நிறைய இருக்கின்றன - பிரத...
நெற்பயிர்ச் செய்கைக்காக வழங்கப்படும் மானியம் விவசாயிகளுக்கு அவசியமற்றது எனில் தேயிலை மற்றும் மரக்கறி...
|
|