பிரதமர் ஜப்பான் விஜயம்!

ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை 1.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச்சென்றுள்ளார்.
ஜப்பான் செல்லும் பிரதமர் எதிர்வரும் 16 ஆம் திகதிவரை தங்கியிருக்கவுள்ளார். இந்த விஜயத்தில் சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, விசேட செயற்திட்ட அமைச்சர் சரத் அமுனுகம ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த விஜயத்தின்போது ஸ்ரீலங்காவுடனான நட்புறவினை ஜப்பான் மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் ஆராயவுள்ளனர்.
பிரதமரின் இந்த விஜயத்தின்போது பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Related posts:
மனைவியையும் இருபிள்ளைகளையும் காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!
வேகமாக பரவுகிறது டெல்டா மாறுபாடு: அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு!
மன்னார் மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக கனகேஸ்வரன் நியமனம்!.
|
|